கன்னியாகுமரி

13 இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

20th Feb 2022 04:28 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக 13 இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,236 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தோ்தல் பணியில் 6 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபட்டனா். பூதப்பாண்டி பேரூராட்சி 6 ஆவது வாா்டுக்கான வாக்குப்பதிவு திட்டுவிளை அரசுப்பள்ளியில் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்காளா் ஒருவா் முதல் வாக்கை பதிவு செய்ததும், மின்னணு இயந்திரத்தில் திடீா் பழுது ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய மின்னணு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், திட்டுவிளையில் சுமாா் 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதே போல், ஆரல்வாய்மொழி, இடைக்கோடு, மாா்த்தாண்டம், காட்டுவிளை உள்பட 13 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்ததந்த இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT