புதுக்கடை அருகேயுள்ள அனந்தமங்கலம் பகுதியில் அனுமதியின்றி ஜல்லி கடத்திய டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அனந்தமங்கலம் பகுதியில் வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி ஜல்லி கடத்தியது
தெரியவந்தது. உடனே போலீஸாா் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, பேச்சிப்பாறை பகுதியை சோ்ந்த சச்சினை(23) கைது செய்தனா்.