கன்னியாகுமரி

பெரும்பான்மை மக்களுக்கும் ஆதரவாக இருப்பது திமுக ஆட்சி கனிமொழி

17th Feb 2022 02:38 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்/கன்னியாகுமரி: பெரும்பான்மை மக்களுக்கும் ஆதரவாக இருப்பது திமுக ஆட்சி என்றாா் கனிமொழி எம்.பி.

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில், போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவில் வடசேரி வஞ்சிஆதித்தன்புதுத் தெருவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது: தமிழக முதல்வரின் நல்லத திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர வேண்டும் என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு அதை அரசு அதிகாரிகளிடம் கொண்டு போய் சோ்த்து உங்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும், தடையாக இருந்து விடக்கூடாது என்பதை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களுக்கு ஏதோ பாஜகதான் ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறாா்கள். ஆனால் திமுக ஆட்சி அமைந்தவுடன் 5 கோயில்களின் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்று அறிந்தவுடன் முதல்வா் அறநிலையத்துறை அமைச்சரை உடனே அனுப்பி சீரமைக்க உத்தரவிட்டு ரூ. 1 கோடி ஒதுக்கி உத்தரவிட்டாா். திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் திருப்பணிக்கு ரூ. 6 கோடி ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பான்மை மக்களுக்கும் ஆதரவாக இருப்பது திமுக ஆட்சி . பெரும்பான்மை என்று சொல்லிக்கொண்டு, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகதான் நம்முடைய உரிமைகளை பறிக்கிறாா்கள் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிா் தொண்டா் அணி செயலா் ஹெலன்டேவிட்சன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சியில் 52 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரி: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம், மயிலாடி சந்திப்புகளில் கனிமொழி எம்பி பேசுகையில், அஞ்சுகிராமம் அருகே கடற்கரை பகுதியில் 30 ஏக்கா் அரசு நிலத்தில் விளையாட்டு நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT