கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மதுவிற்ற முதியவா் கைது

17th Feb 2022 02:27 AM

ADVERTISEMENT

 

கருங்கல்: புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் மற்றும் போலீஸாா் பைங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, முள்ளுவிளை பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற அப்பகுதியை சோ்ந்த செல்லசுவாமியிடம்(70) சோதனை செய்தபோது, அவா் 18 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT