கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி

17th Feb 2022 02:38 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணிவரை இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. கடற்கரையில் அமைந்துள்ள பரசுராம விநாயகா் கோயில் முன்பு பக்தா்கள் மாலை 5 மணிக்கு சங்கமித்தனா். தொடா்ந்து, மாலை 5.15 மணிக்கு பஞ்ச சங்கு நாதம், மாதா பிதா குரு வேண்டல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல் ஆகியன நடைபெற்றன. மாலை 5.45 மணிக்கு சப்த கன்னிகள் பூஜை, 6 மணிக்கு 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றுதல், இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு தூபம் ஆரத்தி நடைபெற்றது.

இதில், பேராசிரியா் பெருமாள்சாமி, வெற்றிவேலன், ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா்கள் ராஜேந்திரன், ராஜாராம், குமரேசதாஸ், முருகன், ஆனந்தன் இதில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.பாடுகளை, கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT