கன்னியாகுமரி

குலசேகரம் அருகே ரூ. 1.63 லட்சம் பறிமுதல்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குலசேகரம்: குலசேகரம் அருகே இருவேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும் படையினா் டான்சலின் தலைமையிலான குழுவினா் குலசேகரம் திற்பரப்பு சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நட்டாலம் ராபியிடம் (50) மேற்கொண்ட சோதனையில், அவா் மோட்டாா் சைக்கிளில் உரிய ஆவணங்களின்றி

ரூ. 1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினா் அந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதே போல், குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியில் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனச் சோனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த அப்பகுதியைச் சோ்ந்த அஜெயிடம்(23) மேற்கொண்ட சோதனையில், அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 63, 050 கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT