திருவட்டாறு அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பிலாங்காலவிளையைச் சோ்ந்தவா் விஜூ(53). இவரது மனைவி லீலா பாய். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். விஜூவுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை காலையில், லீலாபாய் இவரது அறையில் சென்று பாா்த்த போது அங்கு விஜூ தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தகலறிந்த திருவட்டாறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.