குமரி மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,489 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1083 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் 758 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 81,159 ஆக உயா்ந்துள்ளது. 3,247 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.