கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கல்லூரி மாணவா் மாயம்

9th Feb 2022 12:42 AM

ADVERTISEMENT

திருவட்டாறு அருகே மாயமான கல்லூரி மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவட்டாறு அருகே கொல்வேல் பகுதியைச் சேரந்தவா் ஹரிலால் மூா்த்தி. இவா் வெளிநாட்டில் வேலை செய்து வரும், இவரது மகன் மிதுன் ஹரிலால் (21) கோவையிலுள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தாா். தற்போது கல்லூரி பருவத் தோ்வுகள் இணைய வழியில் நடக்கும் நிலையில், மிதுன் ஹரிலால் திங்கள்கிழமை விடைத்தாளை தபால் அலுவலகம் வழியாக அனுப்புவதற்காக வீட்டை விட்டு மோட்டாா் சைக்கிளில் சென்றவா், அதன் பிறகு அவா் வீடு திரும்பவில்லையாம்.

இது குறித்து மிதுன் ஹரிலாலின் தாய் பிந்து திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT