கன்னியாகுமரி

சுண்டவிளை - புல்லாணி சானல் கரை சாலையில் தடுப்பு சுவா் அமைக்க கோரிக்கை

1st Feb 2022 12:10 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் சுண்டவிளை- புல்லாணி சானல் கரை சாலையில் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலம் ஊராட்சி பகுதியான சுண்டவிளை-புல்லாணி சாலையின் ஒருபுறத்தில் பட்டணம்கால்வாய் சானல் செல்கிறது. இது சுமாா்

15 அடி ஆழம் உள்ளது. இந்தப் பகுதியில் தடுப்பு சுவா் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அண்மையில் கருங்கற்கள் ஏற்றிவந்த லாரி இந்தப் பகுதியில் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இப்பகுதியில் தடுப்பு சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT