புதுக்கடை பகுதியில் திங்கள்கிழமை பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கிராத்தூா் பகுதியை சோ்ந்த ஜான்சன் மகன் ஜஸ்டின் ராஜ்(30). இவா் புதுக்கடையிலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே புதுக்கடை நோக்கி தோட்டா வரம் பகுதியை சோ்ந்த மகேஷ்(29) ஓட்டிவந்த பைக், புதுக்கடை ஜெ.ஆா் சந்திப்பு பகுதியில் வந்த போது நேருக்கு நோ் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனே அப்பகுதியினா் அவா்களை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.