கருங்கல் அருகே எட்டணி -மாா்த்தாண்டம் சாலையில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு அமைக்கப்பட்ட குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகியது.
ஜல்ஜீவன் திட்டத்தில் காட்டாத்துறையிலிருந்து கொல்லஞ்சி, நட்டாலம், முள்ளங்கனாவிளை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க அண்மையில் குழாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் குடிநீா் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.
எட்டணி -மாா்த்தாண்டம் சாலை துண்டத்துவிளை பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, தண்ணீா் வெளியேறி வீணாகியது. குழாய்கள் தரமற்ாக இருப்பதால், சில நாள்களிலேயே உடைப்பு ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.