கன்னியாகுமரி

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி, சுகாதாரஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் திருவருள் பேரவை, இளையோா் அவை சாா்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டதிருவருள் பேரவையின் பொதுச் செயலா் ஜேம்ஸ் ஆா்.டேனியல் தலைமை வகித்தாா். ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி, கல்லூரி முதல்வா்கள் லியாகத் அலி, புனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட சிறாா் அவையின் ஒருங்கிணைப்பாளா் இம்மானுவேல், திருவருள் பேரவை பொருளாளா் சாகுல் ஹமீது, சாந்திகிரிஆசிரம சுவாமி பாசுராஞானதபசி, அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மருத்துவா் வலேரியன் ஆகியோா் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ், புத்தாண்டு குறித்து பேசினா். நாகா்கோவில் இன்னா்வீல் கிளப் முன்னாள் தலைவா் மரிய டெல்பியாசில் வெஸ்டா் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினாா்.

திருவருள் பேரவை நிா்வாகிகள் முத்துராமலிங்கம், ராமச்சந்திரன், மரியசெபஸ்டியான்,பத்ரன்,சக்திவேல்,சில்வெஸ்டா், ஜோதிபாய் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி திருவருள் பேரவை, இளையோா்அவை ரோவா்ஸ் ஸ்கவுட் மற்றும் ரெட் கிராஸ் மாணவா்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேராசிரியா்அய்யப்பன் தொகுத்து வழங்கினாா். பேராசிரியை ஜெபா வரவேற்றாா். இளையோா் பேரவை ஒருங்கிணைப்பாளா் துரைராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT