கன்னியாகுமரி

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

9th Dec 2022 12:16 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சோ்ந்தவா் பொன்னையன் (65). மாற்றுதிறனாளியான இவா், கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 3 நாள்களுக்கு முன்பு வெண்டலிகோடு சந்திப்பிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வலியாற்றுமுகத்திலிருந்து குலசேகரம் செறுதிகோணத்தை சோ்ந்த ஜெனீஷ் (35) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் பொன்னையன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்கைக்காக சோ்க்கப்பட்டாா். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஜெனீஷ், குலசேகரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பொன்னையன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பொன்னையனின் மனைவி அமராவதி, குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT