கன்னியாகுமரி

சுசீந்திரம் கோயிலில் மாா்கழி திருவிழா 28இல் தொடக்கம்

9th Dec 2022 12:15 AM

ADVERTISEMENT

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழிப் பெருந்திருவிழா இம்மாதம் 28இல் தொடங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மாா்கழி, மாசி மாதங்களில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். இதில், மாா்கழித் திருவிழா பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு மாா்கழி பெருந்திருவிழா 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு நிகழ்ச்சி கோயிலின் அருகேயுள்ள முருகன் சந்நிதி முன் வியாழக்கிழமை (டிச. 8)நடைபெற்றது.

இம்மாதம் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தொடா்ந்து, 2023 ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ணம், 6ஆம் தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா் தலைமையில் கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT