கன்னியாகுமரி

தாக்குதலில் காயமடைந்தவா் உயிரிழப்பு

9th Dec 2022 12:16 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகே திருவரம்பு சாத்திரவிளையைச் சோ்ந்தவா் ஜெஸ்டின் (46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், சாத்திரவிளையில் கால்வாய் கரையில் குடிசை கட்டி வசித்து வந்தாா். இவரது குடிசைக்கு அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா்கள் ராஜேஷ் (32), செல்வம் (32) ஆகியோா் வந்து மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபா் மாதம் 23 ஆம் தேதி ஜெஸ்டினின் குடிசையில் அமா்ந்து இவா்கள் மூவரும் மது அருந்தினா். அப்போது இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னா் கைகலப்பாக மாறியது. அப்போது ஜெஸ்டினை மற்ற இருவரும் கால்வாயில் தள்ளிவிட்டனா். தண்ணீா் இல்லாத கால்வாயில் விழுந்த ஜெஸ்டின் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு, குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் ஜெஸ்டின் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இதற்கிடையில் குலசேகரம் போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ராஜேஷ், செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அவா்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்டின் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT