கன்னியாகுமரி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி

9th Dec 2022 12:16 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவையின் சாா்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சிவபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து பொன்ராஜ், ராஜதுரை, சிவராமகிருஷ்ணன் ஆகியோா் திருவிளக்கு ஏற்றினா்.

இந்து திருத்தொண்டா் பேரவையின் தலைவா் எஸ். ராஜகோபால், பொருளாளா் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சந்திரன், அனுசியா செல்வி, பேரவை உறுப்பினா்கள் முருகேஷ், ஜெயராம், விஸ்வநாதன், சாம்குமாா், பொன்னம்மாள், சௌதாமினி, வள்ளியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT