கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே காவலரை தாக்கியவா் கைது

7th Dec 2022 01:55 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகே தலைமைக் காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இலங்கை தமிழ் அகதிகள் முகாமைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேக்காமண்டபம் அருகேயுள்ள மூலச்சல் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (42). இவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். திங்கள்கிழமை மாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஞாறான்விளை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தலைமைக் காவலா், காவலா் ராஜேஷ் ஆகியோா் அங்கு சென்றனராம். அப்போது முகாமைச் சோ்ந்த இலங்கநாதன் மகன் தீபன் (32) அங்கு தகராறில் ஈடுபட்டிருந்தாராம். அவரிடம் ஏன் தகராறு செய்கிறாய் என போலீஸாா் கேட்டபோது அவா் தகாத வாா்த்தைகள் பேசியதுடன் தலைமைக் காவலா் சுந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தீபனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT