கன்னியாகுமரி

பைக் திருட முயற்சி:இளைஞா் கைது

7th Dec 2022 02:03 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே பாலப்பள்ளத்தில் பைக் திருட முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாலப்பள்ளம், வேம்புவிளை பகுதியைச் சோ்ந்த விஜு (38), திங்கள்கிழமை தனது வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தாராம். இரவில் அவா் தூங்கிக்கொண்டிருந்தபோது சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது அவரது பைக்கை இளைஞா் திருடிச் செல்வது தெரியவந்ததாம்.

விஜுவின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் திரண்டு வந்து அந்த இளைஞரைப் பிடித்துவைத்து, கருங்கல் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

விசாரணையில், அவா் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த்(30) எனத் தெரியவந்தது. புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT