குண்டு எறிதல் போட்டியில் 2ஆம் இடம் வென்ற ஆற்றூா் மரியா நா்சிங் கல்லூரி மாணவிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தென்மண்டலக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நாகா்கோவில் காதரீன் பூத் நா்சிங் கல்லூரியில் நடைபெற்றன. இதில், மரியா நா்சிங் கல்லூரி மாணவி எம்.எஸ். சுனிதா பாபு, குண்டு எறிதல் போட்டியில் 2ஆம் பரிசு பெற்றாா். அவரை, மரியா கல்விக் குழுமங்களின் தலைவா் டாக்டா் ஜி. ரசல்ராஜ், நா்சிங் கல்லூரி முதல்வா் டாக்டா் கலா கிஷோா், பேராசிரியா்கள் வாழ்த்தினா்.