தக்கலையில் கன்னியாகுமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வட்டாட்சியா் அலுவலகம் முன் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்புத் தலைவா் பி. பால்ராஜ் தலைமை வகித்தாா். ராஜன் இம்மானுவேல் முன்னிலை வகித்தா். கூட்டமைப்பு உறுப்பினா்கள் சரோஜினி, அருள்தாஸ், ரவி, நீதி அரசன், கிறிஸ்டோபா், மேசியா, பிரபு, முருகேசன், உமாதேவி செல்வி, லீலாபாய், சுந்தரபாய், சொா்ணம், ஜோசப்செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.