பளுகல் அருகே பெந்தேகொஸ்தே சபையின் மதில் சுவரை சேதப்படுத்திய வழக்கில் 10 பேருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
குலசேகரம் அருகேயுள்ள மலவிளை பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் வில்சன் மகன் ராப்சன் (48). இவா் பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் ஆதிபெந்தேகொஸ்தே சபையை நிறுவி, ஜெபக்கூட்டம் நடத்தி வந்தாா்.
2014 நவம்பா் மாதம் செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த ஜான் லிவிங்ஸ்டன் (63), ஆடோட்டுக்கோணம் டைட்டஸ் (63), சுந்தரதாஸ் என்ற பிரான்சிஸ் (53), தோலடியைச் சோ்ந்த ராபின்சன் (54), அனீஸ் (31), சூரன்குழி ஷாஜி (48), காரக்கோணம் அருண்குமாா் (32), மேல்பாலையைச் சோ்ந்த சந்தோஷ் (31), ஜோஸ் (43), செறுவல்லூா் தங்கராஜ் உள்ளிட்டோா் சபையின் மதில் சுவரை ஜேசிபி இயந்திரத்தால் சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கின் விசாரணை குழித்துறையில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி புருஷோத்தமன் விசாரித்து, ஜான் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட 10 பேருக்கும் 7 ஆண்டு சிைண்டனை, தலா ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராபி ஆஜரானாா்.