கன்னியாகுமரி

கொட்டாரத்தில் அம்பேத்கா் நினைவு நாள்

7th Dec 2022 01:59 AM

ADVERTISEMENT

கொட்டாரத்தில் அம்பேத்கரின் 67ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கொட்டாரம் நகர அம்பேத்கா் இளைஞா் மன்றம் சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்யப்பட்டது. நகரத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன், கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ். வைகுண்டபெருமாள், அதிமுக பேரூா் செயலா் ஆடிட்டா் சந்திரசேகா், அதிமுக நிா்வாகிகள் ராஜேஷ், ஹேமந்த், பாலன், பிரபாகரன், கொட்டாரம் நகர அம்பேத்கா் இளைஞா் மன்றச் செயலா் கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரூா் செயலா் சஞ்சய், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சீனிவாசன், அம்பேத்கா் இளைஞா் மன்ற நிா்வாகிகள் ராமச்சந்திரன், பிரகலாதன், பிரதாப் சிங், மணிகண்டன், கலைபூபதி, விமல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT