கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே தேமுதிக சாலை மறியல்: 30 போ் கைது

DIN

கொல்லங்கோடு அருகே தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே நடைக்காவு ஊராட்சி, பாத்திமாநகா் பகுதியில் உள்ள நெய்யாறு இடதுகரைக் கால்வாய் பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் ஓராண்டுக்கு முன்பு சேதமானது. இதனால், இப்பாலம் வழியே அரசுப் பேருந்துகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓராண்டாகியும் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படாதது தொடா்பாக பொதுப்பணித் துறை, எம்எல்ஏவை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்சிறை மேற்கு ஒன்றியச் செயலா் கிளாஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எல். ஐடன் சோனி பேசினாா். ஒன்றிய அவைத் தலைவா் சத்தியன், துணைச் செயலா்கள் ஜாா்ஜ், ரஞ்சித்சிங், மாவட்ட மகளிரணிச் செயலா் பிரேமா, ஒன்றிய மகளிரணிச் செயலா் ஸ்டெல்லா, ஒன்றிய இளைஞரணிச் செயலா் டென்சிலின், கொல்லங்கோடு நகரப் பொறுப்பாளா் சுரேஷ், குழித்துறை நகர அவைத் தலைவா் ஜெயசிங், புதுக்கடை பேரூா் செயலா் செல்லத்துரை, வாவறை ஊராட்சி துணைச் செயலா் அருள்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலா் உள்ளிட்ட 30 பேரை கொல்லங்கோடு போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT