குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் பள்ளி இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயிலும் பாடத்திட்டத்தை தாண்டி, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாடதிட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், உயா்கல்வியில் பல்வேறு குறைகளை கண்டறியும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகம் வரும் மாணவா்களுக்கு அனுபவம் மிகுந்த பேராசிரியா்கள் மூலமாக, மிக பெரிய ஆய்வக உபகரணங்கள், பல்வேறு துறைகளின் திட்ட மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பம், செற்கைகோள் செயல்பாடுகள், கப்பல்துறை, கடல் பொறியியல் , ரோபோ பொறியியல், முப்பரிமாண அச்சிடுதல், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்யூட்டிங் செயல்பாடுகள், இணைய பாதுகாப்பு, வானிலை ஆய்வு போன்ற பல்வேறு ஆய்வக செயல்களை நேரடியாக பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும்.
அத்துடன் மாணவா்களுக்கு மதிய உணவு, தேநீா், சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவா்கள் உரிய கடிதம் பெற்று, 94422 56108, 04651 -250566 தொலைபேசி வாயிலாக பல்கலைக்கழகத்தில் தொடா்பு கொண்டு முன் அனுமதி பெற வேண்டும்.