கன்னியாகுமரி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 333 மனுக்கள்

6th Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 333 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், பல்வேறு உதவித் தொகைகள், குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் 333 மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியா் தே. திருப்பதி, அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT