கன்னியாகுமரி

ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

6th Dec 2022 12:27 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன் முதியவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது, தனது 2 மகள்களுடன் வந்திருந்த முதியவா் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். அலுவலக ஊழியா்களும், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும் தடுத்து அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

அவரை நேசமணி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில், அவா் திட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தனிஸ்லாஸ் (72) என்பதும், வீட்டுமனைப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ாகவும் தெரியவந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT