கன்னியாகுமரி

பைங்குளம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

6th Dec 2022 12:29 AM

ADVERTISEMENT

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்குளம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, பைங்குளம் ஊராட்சித் தலைவா் விஜயராணி தலைமை வகித்தாா். முன்சிறை கால்நடை மருத்துவா் ஜேக்கப் முன்னிலை வகித்தாா்.

முன்சிறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். மண்ட இயக்குநா் பாரிவேந்தன், கோட்ட உதவி இயக்குநா் எட்வா்ட் ஆகியோா் பேசினா்.

இதில், நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் ,வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் சிறந்த கிடா கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பைங்குளம் ஊராட்சி உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT