கன்னியாகுமரி

குளச்சலில் பைக் மோதியதில் தந்தை-மகன் உள்ளிட்ட 3 போ் காயம்

6th Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

குளச்சலில் திங்கள்கிழமை பைக் மோதியதில் தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

குளச்சல் வெள்ளியாகுளம் கோணங்காடு பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கணபதி (78), குளச்சல் பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநரான அவரது மகன் அஜய்குமாா் (48), குளிவிளையைச் சோ்ந்த வெண்சஸ்லாஸ் (67) ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை அண்ணாசிலை வரை நடைப்பயற்சி சென்றுவிட்டு வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

சாஸ்தான்கரை பள்ளி அருகே இவா்கள் மீது பைக் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் காயமடைந்த கணபதி, அஜய்குமாா் ஆகியோா் நாகா்கோவிலிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும், வெண்சஸ்லாஸ் உடையாா்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டிச் சென்றவரைத் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT