கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பழங்குடி மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:28 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட குழுத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். செயலா் வேலப்பன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் பினு குமாா் வரவேற்றாா். பொருளாளா் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, நாம் தமிழா் கட்சி கிழக்கு மாவட்டப் பொருளாளா் அனிட்டா் ஆல்வின், பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் தேவதாஸ் ஆகியோா் பேசினா்.

பழங்குடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தர

வேண்டும். புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பூா்வீக பழங்குடிகளை அவா்களது நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சியை நிறுத்த வேண்டும். தனியாா் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும். சூழியல் அதிா்வு தாங்கு மண்டலப் பகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனா். அனைவரையும் ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனுமதிக்க இயலாது என்றும் ஒருசிலா் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் கூறினா். இதனால், இருதரப்பினரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT