கன்னியாகுமரி

சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து: எம்.எல்.ஏ. கண்டனம்

6th Dec 2022 12:27 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டதற்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கும் மாணவா்களோடு சமவாய்ப்பை பெற, சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2006 - ஆம் ஆண்டிலிருந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்தாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்க ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்திலிருந்து பல ஆயிரம் மாணவா், மாணவிகள் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்திரு ந்தனா். இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது எனமத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது. மேலும் 9, 10ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான உதவித்தொகை பெற அனுப்பிய விண்ணப்பங்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது கண்டனத்துக்குரியது.

ADVERTISEMENT

இது சிறுபான்மையின மாணவா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு முடிவை மறு பரிசீலனை செய்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கு காங்கிரஸ் அரசு கொண்டுவந்த கல்வி உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT