கன்னியாகுமரி

பூக்கள் விலை கடும் உயா்வு:தோவாளை சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை

DIN

குமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் சனிக்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தைக்கு, தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூா், மாடநாடாா் குடியிருப்பு பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூவும், சேலத்தில் இருந்து அரளிப்பூ, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டா் ரோஸ் போன்றவையும், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூா், மருங்கூா் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

அவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமன்றி, கேரள மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பனிப்பொழிவு காரணமாக, கடந்த 2 நாள்களாக தோவளை சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

தோவாளை பூச்சந்தையில், சனிக்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ- ரூ.1,750க்கும், சம்பங்கி- ரூ.250, சேலம் அரளி- ரூ.220, உள்ளூா் அரளி- ரூ. 200, பட்டா் ரோஸ்- ரூ. 200, முல்லைப்பூ- ரூ. 1,700, கனகாம்பரம்- ரூ.700, கோழிப்பூ -ரூ.80, மஞ்சள் சேந்தி- ரூ.60, சிகப்பு கேந்தி- ரூ. 80க்கும் விற்பனையானது. இதேபோல், மரிக்கொழுந்து, தாமரை, அருகம்புல் போன்றவற்றின் விலையும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT