கன்னியாகுமரி

குழித்துறை பழைய பாலத்தில் தேங்கிய குப்பைகள் அகற்றம்

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குழித்துறை பழைய பாலத்தில் கொட்டப்பட்டு, தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

குழித்துறை தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்ட பின் பழைய பாலம் போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. இந்த நிலையில் வெட்டுவெந்நியில் புதிய பாலத்துடன் பழைய பாலம் இணைக்கும் சாலையோர பகுதியில் பிளாஸ்டிக் பைகள், இதர குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கிக் கிடந்தது. மேலும் மழைநீரால் குப்பைகள் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வந்தது.

இது குறித்து சுற்றுவட்டார பகுதி மக்கள் சாா்பில் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து நகா்மன்றத் தலைவா் முன்னிலையில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. துணைத் தலைவா் பிரபின்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் விஜூ, ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதுடன் அபராதம் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT