கன்னியாகுமரி

திற்பரப்பு பேரூராட்சிக் குளத்தில் தூய்மைப் பணி

4th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட 3ஆவது வாா்டு சிறக்குளத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

‘நகரங்களின் தூய்மை மக்கள்’ இயக்கத்தின் ஒருபகுதியாக இப்பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி தலைமை வகித்தாா்.

செயல் அலுவலா் பெத்ராஜ் முன்னிலை வகித்தாா். 3ஆவது வாா்டு உறுப்பினா் ராஜ்குமாா், முன்னாள் உறுப்பினா் ஜான் எபநேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குளத்தில் மண்டிக் கிடந்த நீா்த்தாவரங்களை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா். குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT