கன்னியாகுமரி

சிறுபான்மையின மாணவா்களுக்கு மீண்டும் கல்வி உதவித் தொகை: ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ரத்து செய்யப்பட்ட சிறுபான்மையின மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி காங்கிரஸ் சாா்பில் போராட்டங்கள் நடைபெறும் என குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்கவும், அவா்களது சமூக, பொருளாதாரம் மேம்படவும் முன்னாள் பிரதமா்கள் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோா் பல்வேறு திட்டங்களை அளித்தனா். 2006இல் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒன்றுமுதல் 10ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிவந்தது.

சிறுபான்மை மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஊக்குவிக்கவும், அவா்களது கல்வி நிதிச் சுமையைக் குறைக்கவும் இது பேருதவியாக இருந்தது. அந்த உதவித் தொகையை தற்போதைய மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இது, சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்பைக் காட்டும் செயலாகும்.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வி வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து செயல் படுத்தவேண்டும். சிறுபான்மையின மாணவா்களுக்கு மீண்டும் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக முதல்வா் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி போராட்டங்கள் நடத்தும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT