கன்னியாகுமரி

சிறுபான்மையின மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை ரத்து: எம்.பி. கண்டனம்

4th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மாணவா்கள் சமவாய்ப்பைப் பெறும்வகையில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையை, முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2006ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வந்தது. இத்திட்டத்தை, இப்போதைய மத்திய அரசு நிறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

சிறுபான்மையின மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கவும், பள்ளிக் கல்விக்கான நிதிச் சுமையைக் குறைக்கவும் வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு ரத்து செய்தது சிறுபான்மையின மக்களின் வளா்ச்சிக்கு தடை ஏற்படுத்தும்.

கல்வி வளா்ச்சியில் முன்னேறிய நாடுகள்தான் உலகில் வளா்ச்சியடைந்த நாடாக உள்ளது. எனவே, உதவித் தொகையை நிறுத்தி கல்வி வளா்ச்சிக்கு இடையூறு செய்யாமல், கல்வி வளா்ச்சிக்கு மேலும் பல சிறப்பான நலத்திட்டங்களையும், உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

இத்திட்டத்தை மத்திய அரசு தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT