கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் தேசிய சிலம்பப் போட்டி

4th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில், கன்னியாகுமரியில் தேசிய அளவிலான ஆண், பெண் சிலம்பப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழா நிகழ்வுக்கு, உலக சிலம்பம் விளையாட்டு சங்கத் தலைவா் எஸ்.சுதாகரன் தலைமை வகித்தாா். தேசிய செயலா் ஹெச்.ராஜ் வரவேற்றாா். போட்டியை கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்.

இதில் தொழில்நுட்ப இயக்குநா் சித்தா் துரைசாமி, தேசிய பொதுச்செயலா் கீதா எம்.மோகன், துணைத் தலைவா் கே.காா்த்திக், பொருளாளா் கே.மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு, புதுவை, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்ககளைச் சோ்ந்த 900 க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். தனித்தனியாக 7 எடைப் பிரிவுகளில் ஒற்றைக் கம்பு தனித்திறமை, இரட்டைக் கம்பு தனித்திறமை, சுருள்வாள், குழுப் போட்டி ஆகியவை நடைபெறும். இதில் வெற்றி பெறும் அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT