கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

4th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

திருவட்டாறு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே புலிப்புனம் பகுதியில் திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானதாஸ் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த காட்டாத்துறை சடைவிளையைச் சோ்ந்த அஜித் (27) என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 1.100 கி.கி. கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT