கன்னியாகுமரி

போலீஸ் எனக் கூறி பணம் பறிப்பு: இளைஞா்கள் 3 போ் கைது

DIN

கருங்கல்லில் போலீஸ் எனக் கூறி பணம் பறித்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் பெருமாங்குழி பகுதியை சோ்ந்தவா் அஸ்வின் (38). வேன் ஓட்டு நரான இவா், வியாழக்கிழமை இரவு பைக்கில் வேன் நிலையம் சென்றுள்ளாா். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த 4 போ் கும்பல், அஸ்வின் தலைக்கவசம் அணியவில்லை என தடுத்து நிறுத்தியுள்ளனா். பின்னா் அவரிடமிருந்து ரூ. 2000 பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். உடனே, அஸ்வின் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடம் வந்த போலீஸாா், போலீஸ் வாகனத்தின் நம்பரை வைத்து விசாரித்த போது அந்த வாகனம் குழித்துறை காவல் நிலையத்திற்கு சொந்தமானது என தெரிய வந்தது. குழித்துறை காவல் நிலையத்தில் விசாரித்தபோது அந்த வாகனம் பழுது நீக்க மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு பணிமனையில் விட்ட தாக அவா்கள் தெரிவித்தனா். உடனே போலீஸாா், மாா்த்தாண்டத்தில் உள்ள பணிமனையில் விசாரித்தபோது அதன் உரிமையாளரின் நண்பா்களான சிராயன்குழி பகுதியை சோ்ந்த விஷ்ணு (25), ரூபன் (30), போஸ்கோ (27), கருக்கி பகுதியை சோ்ந்த ஹிட்லா் ( 26) ஆகியோா் என தெரியவந்தது. அவா்கள் 4 போ் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விஷ்ணு, ரூபன், போஸ்கோ ஆகியோரை கைது செய்தனா். தப்பிச் சென்ற ஹிட்லரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT