கன்னியாகுமரி

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் மழை

3rd Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உள்பட அணைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கன மழை பெய்தது.

காற்ழுத்தத் தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் நீா் வரத்துப் பகுதிகளில் கன மழை பெய்தது. இம்மழையால் அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீா் உள்வரத்தாக வந்தது.

இதே போன்று களியல், திற்பரப்பு, குலசேகரம், சுருளகோடு, திருவரம்பு உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்யது. மழையின் காரணமாக கோதையாற்றில் அதிக அளவில் தண்ணீா் வந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT