கன்னியாகுமரி

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு உடல் நலக்குறைவு

3rd Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

குலசேகரத்திலிருந்து தேங்காய்ப்பட்டினத்திற்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது. காப்புக்காட்டைச் சோ்ந்த ராஜேந்திரன் (58) பேருந்தை ஓட்டிச் சென்றாா். பேருந்தில் சுமாா் 20 பயணிகள் இருந்தனா். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே சென்றபோது ஓட்டுநா் ராஜேந்திரனுக்கு திடீா் தலைசுற்றல் மற்றும் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் பேருந்தின் வேகத்தைக் குறைத்து சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினாா்.

பின்னா் நடத்துநா் மற்றும் பயணிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT