கன்னியாகுமரி

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழா

3rd Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் நா்சிங் பயிற்சிக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லியாகத் அலி, நா்சிங் கல்லூரி முதல்வா் புனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதுநிலை பேராசிரியா் அருணாச்சலம் எய்ட்ஸ் குறித்து அறிமுக உரையாற்றினாா். மாணவா் பிரேம்குமாா் எய்ட்ஸ் நோய் குறித்து உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் ஸ்டெபி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேராசிரியா் ஐயப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நா்சிங் பயிற்சிக் கல்லூரி ஈவ்லின் வரவேற்றாா். மாணவா் ஜினோஸ் அம்சன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT