கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

3rd Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் அலெக்சாண்டா பிரஸ் ரோடு பகுதியில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து ஆணையா் ஆனந்த்மோகன், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான குழுவினா் அலெக்ஸ்சாண்டா பிரஸ் ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனை மேற்கொண்ட னா். அந்தப் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை செய்தனா். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. சுமாா் 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த கிடங்குக்கு சீல் வைக்கப் பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT