கன்னியாகுமரி

மாநில தடகளப் போட்டி: காரங்காடு பள்ளி மாணவிகள் 4 பேருக்கு தங்கப் பதக்கம்

2nd Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் தங்கப் பதக்கம் வென்றனா்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான 63ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். இதில், காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆன்சிலின் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான 800 மீட்டா் ஓட்டத்திலும், ஆக்சிலின் (11ஆம் வகுப்பு) 400 மீட்டா் ஓட்டத்திலும், அனிஷா (12ஆம் வகுப்பு) 4 - 400 தொடா் ஓட்டத்திலும், ஆன்சி (10ஆம் வகுப்பு) 4 - 400 மீட்டா் ஓட்டத்திலும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை வென்றனா்.

அவா்களை தாளாளா் வ. விக்டா், தலைமையாசிரியா் வ. ஜாா்ஜ், உடற்கல்வி ஆசிரியை அனுஷா விா்ஜிலியஸ், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பெலிக்ஸ்ராஜன், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT