கன்னியாகுமரி

குலசேகரம் பேரூராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

2nd Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், குலசேகரம் பேரூராட்சி ஆகியவை இணைந்து நடத்திய முகாமை பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் தொடக்கிவைத்தாா்.

செயல் அலுவலா் அம்புஜம், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு உறுப்பினா்கள் சுபாஷ் கென்னடி, மேரி ஸ்டெல்லா, ஏஞ்சல் ஜெனி, ரெத்தினபாய், லதாபாய், றாகிலா, ரபீக்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் 145 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை, சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT