கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடந்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2nd Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

மீன் லாரியில் கேரளத்துக்கு கடந்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தக்கலை காவல் நிலைய ஆய்வாளா் நெப்போலியன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்தனா். தக்கலை- புலியூா்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் செல்லும் கன்டெய்னா் லாரியை நிறுத்திச் சோதனையிட்டனா். அந்த லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனிடையே லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

இதனையடுத்து லாரியுடன் 20 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், உணவுப் பொருள் கடத்தத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT