கன்னியாகுமரி

கருங்கல் அருகே அமலோற்பவ அன்னை ஆலயத் திருவிழா தொடக்கம்

DIN

கருங்கல் அருகே விமலபுரத்தில் புனித அமலோற்பவ அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை (நவ. 29) ஜெபமாலைக்குப் பின்னா், கொடியேற்றுதல் நடைபெற்றது. தொடா்ந்து, மாவேலிக்கரை மறைமாவட்ட ஆயா் ஜோஸ்வா மாா் இக்னாத்தி யோ தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, திருப்பலி நடைபெறும்.

2ஆம் நாளான புதன்கிழமை மாலை அருள்பணி பிராங்க்ளின்ஜோஸ் தலைமையில் திருப்பலியும். பின்னா், நற்செய்தி பெருவிழாவும் நடைபெற்றது.

6ஆம் நாளான டிசம்பா் 4ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும். இதில், சிறுவா்களுக்கு முதல் திருவிருந்து நிகழ்ச்சியும், பின்னா் அன்பு விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறும்.

10ஆம் நாளான டிச. 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு அருள்பணி ஜெபின் தலைமையில் ஆடம்பர ஜெபமாலை திருப்பலியும், அதைத் தொடா்ந்து கொடியிறக்குதலும் நடைபெறும்.

ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா், பங்குப் பேரவையினா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT