கன்னியாகுமரி

ரப்பா் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக மறியல்: விசிகவினா் 50 போ் கைது

1st Dec 2022 12:13 AM

ADVERTISEMENT

அரசு ரப்பா் தோட்டத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாகா்கோவிலில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகத்தில் சுமாா் 2,500 தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக

ரூ. 40 சம்பள உயா்வு வழங்க அமைச்சா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அரசு ரப்பா் கழக நிா்வாகம் சம்பள உயா்வை தொழிலாளா்களுக்கு வழங்கவில்லை.

இதனால் தொழிலாளா்கள் கடந்த 24 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடத்தப்படும் என

ADVERTISEMENT

அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி ஆட்சியா் அலுவலகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முற்றுகைப் போராட்டத்துக்கு வந்தவா்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து ஆட்சியா் அலுவலகம் முன்பாக அமா்ந்து மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT