கருங்கல் அருகே மத்திகோடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். போதகா் ஸ்டீபன்ராஜ் ஜெபித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். பள்ளி முதல்வா் பிரைட் டேவிட் ஆண்டறிக்கை வாசித்தாா்.
ஜேம்ஸ் கல்லூரிகளின் தலைவா் மருத்துவா் ஜேம்ஸ் பிரேம்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிா்வாக அலுவலா் அனுஷா வி. மேரி நன்றி கூறினாா்.