கன்னியாகுமரி

குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினருக்கு விருது

1st Dec 2022 12:13 AM

ADVERTISEMENT

திருவட்டாறு அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் புஷ்பபாய் (60), கோதையாற்றில் கடந்த 10 ஆம் தேதி குளித்தபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா். குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சென்று புஷ்பபாயை திக்குறிச்சி பகுதியில் மீட்டனா்.

இதையடுத்து, குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா் (போக்குவரத்து) செல்வமுருகேசன், நிலைய வீரா்கள் ஜெகதீஸ், கோட்டைமணி, நிஜல்சன், அஜின், மாரிசெல்வம், கபில் சிங், பைஜு, படகு ஓட்டுநா் சுஜின் ஆகியோருக்கு நாகா்கோவில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தென்மண்டல துணை இயக்குநா் நா. விஜயகுமாா் அங்கீகார விருது வழங்கிக் கௌரவித்தாா்.

மாவட்ட அலுவலா் ச. சத்தியகுமாா், உதவி மாவட்ட அலுவலா் இம்மானுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT